யுபிஎஸ்சி மெயின் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள் 155 பேர்!
யுபிஎஸ்சி மெயின் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள் 155 பேர்!
ADDED : நவ 12, 2025 01:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வின் முதன்மைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வை எழுதிய தேர்வர்கள், https://upsc.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்தாண்டை விட தேர்ச்சி வீதம் 13.97% அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 136 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில் இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை 2736 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் பயின்ற 85 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

