போலீசார் மீது தாக்குதல்; ராணுவ வீரர்கள் மீது வழக்கு
போலீசார் மீது தாக்குதல்; ராணுவ வீரர்கள் மீது வழக்கு
ADDED : மே 30, 2024 02:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: போலீசார் மீது தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த ராணுவ வீரர்கள் சிலர் அங்கு இருந்த போலீஸ்காரர்களை அடித்தும், உதைத்தும் தாக்கினர். மேலும் துப்பாக்கி முனைகள் மூலம் அடித்துள்ளனர்.
இந்த சம்பவம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதும், எஸ்.பி., விசாரித்தார். போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக 16 ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பாக லேசான கருத்து வேறுபாடு காரணமாக இந்த மோதல் நடந்ததாகவும், பின்னர் பேசி முடித்து வைக்கப்பட்டதாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.