சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 18 பேர் கைது: டில்லியில் சல்லடை போடும் போலீஸ்!
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 18 பேர் கைது: டில்லியில் சல்லடை போடும் போலீஸ்!
ADDED : ஜூன் 28, 2025 10:17 PM

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டில்லியின் வட மேற்கு பகுதியில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்தினர். அசோக் விகார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட தெருக்களில் சல்லடை போடப்பட்டது.
சந்தேகத்திற்குரிய நபர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை குழப்பும் வகையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து வங்கதேசத்தினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் குழந்தைகள் 3 பேர் அடங்குவர். இதில், திருநங்கைகள் போல் மாறுவேடமிட்ட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் உடை மற்றும் ஹார்மோன் சிகிச்சையை கூட மேற்கொண்டு தங்கள் தோற்றத்தையும் குரலையும் மாற்றி உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் டாக்கா, குல்னா, காசிபூர் மற்றும் அஷ்ரபாபாத் உள்ளிட்ட வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.