லாரி மீது வேன் மோதி விபத்து ராஜஸ்தானில் 18 பேர் உயிரிழப்பு
லாரி மீது வேன் மோதி விபத்து ராஜஸ்தானில் 18 பேர் உயிரிழப்பு
ADDED : நவ 02, 2025 11:40 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஒரு வேனில் பிகானிரில் உள்ள கொலயாத் கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடித்துக்கொண்டு நேற்று இரவு ஜோத்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பலோடி பகுதியில் உள்ள மடோடா கிராமத்தையொட்டிய பாரத் மாலா நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது.
இதில் வேன் முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் சென்ற 18 பேர் பலியாகினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு ஓசியன் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் அனுப்பி வைத்தனர்.
விபத்து பற்றி அறிந்த முதல்வர் பா.ஜ.,வை சேர்ந்த பஜன்லால் சர்மா, விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

