ADDED : நவ 02, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாகூர்: சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 556வது ஜெயந்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாஹிப் குருத்வாராவுக்கு 2,150 இந்திய சீக்கியர்கள் வழிபட செல்கின்றனர்.
குருநானக் தேவ் பிறந்த இடம் பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ளது. நங்கனா சாஹிப் குருத்வாரா எனப்படும் இங்கு, நாளை மறுநாள் முதல் ஒரு வாரம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்காக 2,150 இந்தியர்கள் மற்றும் வெளி நாடுவாழ் சீக்கியர்களுக்கு விசா வழங்கியுள்ளது.
இந்திய சீக்கியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள வாகா எல்லை வழியாக நங்கனா சாஹிப் குருத் வாரா செல்ல உள்ளனர்.

