சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 18 பேர் சரண்!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 18 பேர் சரண்!
ADDED : மே 27, 2025 02:52 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 18 பேர் சரண் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று (மே 27) சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 18 பேர் சரண் அடைந்தனர். சுக்மா எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது: நக்சலைட்டுகள் 18 பேர் இன்று சரணடைந்துள்ளனர்.
தெற்கு பஸ்தாரில் தீவிரமாக செயல்படும் நக்சலைட்டுகளும் சரணடைந்துள்ளனர். அவர்கள் மாநில அரசின் கீழ் செயல்படும் திட்டங்களின் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள். அனைத்து நக்சலைட்டுகளும் சரணடையுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
சரணடைந்த நக்சல் பேட்டி!
சரணடைந்த நக்சல் மாண்டவி கூறியதாவது: நான் 2015ல் நக்சல் நடவடிக்கைகளில் சேர்ந்தேன். தற்போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தேன். அவர்கள் மின்சாரம், தண்ணீர், அனைத்தையும் வழங்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.