ADDED : அக் 27, 2025 01:09 AM
புதுடில்லி: போலி அல்சர் மருந்து தயாரித்த தொழிற்சாலைக்கு, 'சீல்' வைத்த போலீசார், இரண்டு பேரை கைது செய்தனர்.
வடக்கு டில்லி இப்ராஹிம்பூரை சேர்ந்த சந்தீப் ஜெயின், 45, ஜிதேந் தர் என்ற சோட்டு, 23, ஆகிய இருவரும், 'ஆன்டாசிட்' என்ற அல்சர் மருந்தை அதே பெயரில் போலியாக தயாரித்து விற்றனர். மார்க்கெட்டில் தங்கள் நிறுவனத்தின் பெய ரில் போலி மருந்து விற்பனை செய்யப்படுவது குறித்து, அந்நிறுவனம் போலீசில் புகார் செய்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இப்ராஹிம்பூரில் இருந்த போலி மருந்து தொழிற்சாலையைக் கண்டுபிடித்தனர். அங்கிருந்து 91,257 போலி மருந்து பாக்கெட்டுகள், 80 கிலோ மூலப்பொருள், 13 கிலோ லேபிள்கள், 54,780 ஸ்டிக்கர்கள், 2,100 தயாரிக்கப்படாத மருந்து பாக்கெட்டுகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
தொ ழிற்சாலைக்கு, 'சீல்' வைத்த போலீசார், சந்தீப் மற்றும் ஜிதேந்தர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இடத்தை வாடகைக்கு எடுத்து போலி மருந்து தயாரித்து விற்றதை இருவரும் ஒப்புக் கொண்டனர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.

