20 ஆண்டுகளுக்கு முன் நடந்த முறைகேடு 6 பேரை விடுவித்து டில்லி கோர்ட் உத்தரவு
20 ஆண்டுகளுக்கு முன் நடந்த முறைகேடு 6 பேரை விடுவித்து டில்லி கோர்ட் உத்தரவு
ADDED : அக் 27, 2025 01:10 AM
புதுடில்லி: இருபது ஆண்டுகளுக்கு முன், அலகாபாத் வங்கியின் வீட்டுக்கடன் அனுமதியில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கு விசாரணையில் இருந்து, ஆறு பேரை டில்லி கோர்ட் விடுவித்துள்ளது.
நஷ்டம் ராஜன் அரோரா, அவரின் மனைவி சுனிதா, வினய்குமார் கோயல், அவரின் மனைவி வைபவி, அர்விந்த் கோயல், பூஷன் தேவ் சாவ்லா மற்றும் இருவரை, கடந்த 2004 ஜூன் மாதம் தொடர்ந்த, வங்கி முறைகேடு வழக்கிலிருந்து விடுவித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோதி கெர் உத்தரவிட்டு உள்ளார்.
முன்னாள் அலகாபாத் வங்கி அதிகாரி, வி.கே.சிப்பர் என்பவருடன் சேர்ந்து, விடுவிக்கப்பட்டுள்ள ஆறு பேரும் வங்கிக்கு 77.6 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
டில்லியின் ஷாலிமார் கிராமம் மற்றும் ஒல்டு கோவிந்த்புரா ஆகிய இடங்களில் வீட்டுக்கடன் வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாகவும், அதில், இந்த ஆறு பேருக்கும் தொடர்பு உள்ளது எனவும் தெரிவித்து, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், 2021ல், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை வழக்கு விசாரணையிலிருந்து விடுவித்து, சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டது.
சாட்சியம் அந்த உத்தரவையே, இந்த ஆறு பேர் மீதான வழக்கு விசாரணைக்கும் பொருந்தும் என, இப்போது நீதிபதி ஜோதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் அரவிந்த் கோயல் மற்றும் சாவ்லா ஆகியோர் இறந்து விட்டதால், வழக்கிலிருந்து அந்த இருவரும் முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். அது போலவே, இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக விசாரிக்கப்பட்டு வந்த ஆறு பேரையும் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கு ற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீதான புகார்களை முறையாக விசாரிக்க, சி.பி.ஐ., தவறியதாகவும், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை முறையாக விசாரிக்க மறுத்ததால் தான், இந்த ஆறு பேரையும் கோர்ட் விடுவித்ததாகவும், தன் உத்தரவில் டில்லி கோர்ட் நீதிபதி கூறி யுள்ளார்.

