தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது


ADDED : ஜன 12, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயலில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்டோவில் கஞ்சா கடத்திச் செல்வதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் உரிகம் அம்பேத்கர் சாலையில் உள்ள மலையாளி திடல் அருகே கலால் பிரிவு அதிகாரிகள் ஆட்டோவை நிறுத்தினர்.

அவர்கள் சோதனை நடத்தியதில் 750 கிராம் கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்திச் சென்ற ஜீவன், 35, நவீன், 34, ஆகிய இருவரை போலீசில் ஒப்படைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் தங்கவயலில் இருந்து பங்காருபேட்டைக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us