கர்நாடக காங்., உடன் கைகோர்ப்பு; 2 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம்
கர்நாடக காங்., உடன் கைகோர்ப்பு; 2 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம்
UPDATED : மே 28, 2025 05:27 AM
ADDED : மே 28, 2025 05:27 AM

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், 67. உத்தர கன்னடா, யல்லாபூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார், 68.
இவர்கள் இருவரும் முன்பு காங்கிரசில் இருந்தவர்கள். 2019ல், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்த 17 பேரில், இவர்களும் அடக்கம்.
அதே ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியில் இருவரும் அமைச்சர்கள் ஆகினர். 2023 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் காங்., ஆட்சிக்கு வரவே, காங்கிரசுடன் மீண்டும் நெருக்கம் காட்டினர்.
இதையடுத்து சோமசேகர், சிவராம் ஹெப்பாருக்கு விளக்கம் கேட்டு, பா.ஜ., ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இருவரும் விளக்கம் அளித்து இருந்தனர். இந்நிலையில், பா.ஜ.,விலிருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளன

