ADDED : நவ 03, 2025 01:44 AM
முசாபர்நகர்: உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் காரி பிரோசாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு, 29. நேற்று முன்தினம் மொபைல் போனில் அழைப்பு வந்தவுடன் வீட்டில் இருந்து சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. அதே கிராமத்தில் ஒரு கரும்புத் தோட்டத்தில் சோனு உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. உடல் அருகே கிடந்த ரத்தக் கறை படிந்த கத்தி மற்றும் பைக் மீட்கப்பட்டன. உடற்கூறு ஆய்வுக்காக சோனு உடல், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
துாக்கில் தொங்கிய ஆண் முசாபர் நகர் மாவட்டம் புகானா அருகே கேடிகனி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா காஷ்யப் உடல் மரத்தில் துாக்கில் தொங்கியது.
தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.

