ADDED : நவ 03, 2025 01:46 AM
மீரட்:  உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில், வாகனத்தால் மோதி அசோக ஸ்துாபியை சேதப்படுத்தியவரை போலீசார் தேடுகின்றனர். உ.பி., மாநிலம் மீரட் நவுசாண்டி மைதானத்தில் உள்ள, அசோக ஸ் துா பி நேற்று முன் தினம் நள்ளிரவில், பின்னோக்கி வந்த வாகனம் மோதி சேதம் அடைந்தது.
இது, அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்தக் காட்சிகள் சமூக ஊடங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நேற்று காலை நவுசாண்டி மைதானத்தில் திரண்ட மக்கள், ஸ்தூபியை சேதப்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தினர். தகவல் அறிந்து வந்த மீரட் போலீசார், சேதமடைந்த பகுதிகளை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அசோக ஸ் துா பியை சேதப்படுத்திய டிரைவரை தேடுகின்றனர். மேலும், அசோக ஸ் துா பி மற்றும் மீரட்டின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

