காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பஸ்: 3 ஜவான்கள் பலி
காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்த பயணிகள் பஸ்: 3 ஜவான்கள் பலி
UPDATED : செப் 20, 2024 07:54 PM
ADDED : செப் 20, 2024 07:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: காஷ்மீரில் கிடுகிடு பள்ளத்தில் பயணிகள் பஸ் உருண்டு விழுந்த விபத்தில் 3 ஜவான்கள் பலியாயினர்.
காஷ்மீரின் பட்ஹாம் மாவட்டத்தில் மலைப்பாதையில் 52 பயணிகளுடன் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 32 பேர் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்புபடையினரும் இருந்தனர்.
மலைப்பாதையின் வளைவில் திரும்ப முயன்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதி்ல்3 பி.எஸ்.எப். வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.