தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பயிற்சி விமானம் விழுந்து உ.பி.,யில் 2 விமானிகள் பலி

பயிற்சி விமானம் விழுந்து உ.பி.,யில் 2 விமானிகள் பலி

பயிற்சி விமானம் விழுந்து உ.பி.,யில் 2 விமானிகள் பலி


ADDED : ஆக 27, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கான்பூர்: உத்தர பிரதேசத்தில், கங்கை நதிக்கரை அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில், பயிற்சி விமானி மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.

உ.பி.,யின் கான்பூரில் உள்ள, ‘கார்க் ஏவியேஷன்’ என்ற விமான பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமான, ‘டெக்னாம்’ ரக விமானம் நேற்று காலை 11:30 மணிக்கு புறப்பட்டது. இரட்டை இன்ஜின் கொண்ட இந்த விமானத்தில், குஜராத்தைச் சேர்ந்த பயிற்றுனர் சச்சின் பாட்டியா, கர்நாடகாவைச் சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி ஆகியோர் சென்றனர்.

இந்த விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களில், நாதபுர்வா என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த பயிற்றுனர் சச்சின் பாட்டியா, 3,000 மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவம் கொண்டவர்.

விமான விபத்துக்கான காரணம் குறித்து எதுவும் தெரியாத நிலையில், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர, விமானத்தின் பறக்கும் தகுதி, பராமரிப்பு பதிவுகள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்களை, டி.ஜி.சி.ஏ., எனப்படும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us