ADDED : நவ 02, 2025 12:10 AM
கோட்டா: ராஜஸ்தானில், எதிரே வந்த கார் மீது பள்ளி வேன் மோ திய விபத்தில் மாணவியர் இருவர் பலியாகினர்.
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள இட்டாவா நகரில் உள்ள தனியார் ப ள்ளிக்கு கைட்டா கிராமத்தில் இருந்து 12 மாணவ, மாணவியர் வேனில் நேற்று காலை சென்றனர்.
இட்டா வா அருகே சென்றபோது திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் இரு வாகனங்களும் தலை குப்புற கவிழ்ந்தன. இந்த விபத்தில் வேனில் சென்ற 10ம் வகுப்பு மாணவி தனு தகாத், 15 மற்றும் நான்காம் வகுப்பு மாணவி பருல் ஆர்யா, 8, ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கோட்டாவில் உள்ள புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான காயம் அடைந்த வேன் டிரைவர், காரில் வந்த ஒருவர் இட்டாவா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தப்பியோடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

