13வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை; காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டு
13வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை; காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டு
ADDED : ஜன 27, 2025 01:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தானே: மஹாராஷ்டிராவில் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தானேவில் உள்ள தேவிசபாடா பகுதியில் கடந்த வாரம் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  13 மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது.
அப்போது, அங்கிருந்த பாவேஷ் மாத்ரே என்ற இளைஞர் உடனடியாக ஓடிச் சென்று குழந்தையை காப்பாற்றினார். இருப்பினும், சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இவர்தான் உண்மையான ஹீரோ என்று பாவேஷூக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

