2,000 ஏக்கரில் அறிவு, ஆராய்ச்சி நகரம் ரூ.40,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டம்
2,000 ஏக்கரில் அறிவு, ஆராய்ச்சி நகரம் ரூ.40,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டம்
ADDED : பிப் 17, 2024 04:49 AM
l கடந்த 2023 - 2024ம் நிதி ஆண்டில் கர்நாடகா அரசு 88,150 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து உள்ளது.
l பெங்களூரு அருகே 2,000 ஏக்கரில் அறிவு, சுகாதாரம், கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி நகரம் அமைக்கப்படும். இதன்மூலம் 40,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும்
l தொழில்துறை வளர்ச்சியில் கர்நாடகா உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த நிலையை அப்படியே கையாண்டு இன்னும் நிறைய, முதலீடுகளை ஈர்ப்போம். இந்த ஆண்டு புதிய தொழில் கொள்கை வகுக்கப்படும்
l சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, பிப்ரவரி 2025ல் நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலத்திற்கு அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும்.
l பெங்களூரு - மும்பை பொருளாதார மண்டலத்தில், தார்வாட் அருகே 6,000 ஏக்கரில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும். இதன்மூலம் வடமாவட்டங்களில் நிலவும் வேலையில்லா பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதுடன், அப்பகுதி பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடையும்
l புதிய மணல் கொள்கை - 2020, பொதுமக்கள், அரசு பணிகளுக்கு மலிவு வகையில், மணல் கிடைக்க செய்யும் வகையில் இருந்தது. இந்த திட்டம் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும். புதிய மணல் கொள்கையில் உள்ள, சில பிரச்னைகளும் சரிசெய்யப்படும்
l மாண்டியா சர்க்கரை ஆலை வளாகத்திற்குள், புதிய சர்க்கரை ஆலை கட்டப்படும். இதற்கான பணம், அரசு ஒதுக்கும் நிதி, ஆலையின் சொத்துகள், பிற வழிகளில் இருந்து பெறப்படும்
l ஜவுளி மற்றும் நெசவு தொழில் வளர்ச்சிக்காக, புதிய ஜவுளி கொள்கை அமல்படுத்தப்படும். இதன் மூலம் 10,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்ப்பதுடன், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியும்.
l மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில், கலபுரகி மாவட்டத்தில் 1,000 ஏக்கர் நிலத்தில், ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும்; 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும்.
l பொது - தனியார் பங்களிப்பில் கித்துார் கர்நாடகா, கல்யாண கர்நாடகா, மைசூரு மண்டலத்தில் புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்
l மினி ஜவுளி பூங்கா 25 மாவட்டங்களில் அமைக்கப்படும்
l மஹாத்மா காந்தி வந்து சென்ற, மைசூரின் நஞ்சன்கூடு பதனவாலு கிராமத்தில், காதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
l பல்லாரியில் ஜீன்ஸ் தொழிலை ஒருங்கிணைத்து, உலகதரத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஜீன்ஸ் தயாரிப்பு பூங்கா மற்றும் அடிப்படை வசதி மையம் அமைக்கப்படும்.