அடிப்படை வசதிகளுக்கு ரூ.2,000 கோடி துமகூரு, தேவனஹள்ளிக்கு மெட்ரோ ரயில்
அடிப்படை வசதிகளுக்கு ரூ.2,000 கோடி துமகூரு, தேவனஹள்ளிக்கு மெட்ரோ ரயில்
ADDED : பிப் 17, 2024 04:56 AM
நகராட்சி
l மகாத்மா காந்தி நகர விகாஸ் திட்டம் 2.0 கீழ், மாநிலத்தின் 10 மாநகராட்சி பகுதிகளில், அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி - தார்வாட், பெலகாவி, கலபுரகி, தங்கவயல், துமகூரின் வசந்தநரசாபுரா, பல்லாரி ஆகிய நகரங்களின் அருகில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டைகள் மேம்படுத்தப்படும்
l பெங்களூரு புறநகர் பகுதிகளான தேவனஹள்ளி, நெலமங்களா, ஹொஸ்கோட், தொட்டபல்லாப்பூர், மாகடி, பிடதி நகரங்களை, சாலை மற்றும் ரயில் இணைப்பு கொண்ட சாட்டிலைட் நகரங்களாக மேம்படுத்தப்படும்
l பெங்., சர்வதேச கண்காட்சி மையத்தில் இருந்து, துமகூரு வரையிலும்; கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தேவனஹள்ளி வரை தனியாருடன் இணைந்து மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்க, செயல் திட்டம் அறிக்கை தயாரிக்கப்படும்.
வெளிவட்ட சாலை
l கலாசார நகரமான மைசூரில், தனியாருடன் இணைந்து புறநகர் வெளிவட்ட சாலை அமைக்க, செயல் திட்டம் தயாரிக்கப்படும்
l நகர பகுதிகளின் அனைத்து வீடுகளுக்கும், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாயில், 7.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்
l மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ், திட, திரவ கழிவு மேலாண்மை செய்ய, மத்திய அரசின் 2,185 கோடி ரூபாய் உட்பட 5,072 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன், குறிப்பிட்ட நகரங்களில், 539 கோடி ரூபாயில், அம்ருத் 2.0 கீழ், ஏரி, நீர் நிலைகள், பூங்காக்கள் மேம்படுத்தப்படும்
l நகர பகுதிகளில், சொத்து பதிவில் முறைகேட்டை தடுக்க காவிரி மற்றும் இ - சொத்து ஆன்லைன் முறை மாநிலம் முழுதும் விரிவாக்கம் செய்யப்படும்
l சொத்து வரி கட்டணத்தை முறையாக வசூலிக்கும் வகையில், ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தி சர்வே செய்யப்படும்
l நகர உள்ளாட்சி அமைப்புகளில், சொத்து வரி, குடிநீர் வரி வசூலிக்கும் பணியில், மகளிர் சுய உதவி குழுக்களின் உதவி பெறப்படும்
l ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உள்ளாட்சிகளில், திட்ட வாரியங்களை, நகர வளர்ச்சி வாரியங்களாக தரம் உயர்த்தப்படும்
l அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டங்களும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்
l மைசூரின் பிரசித்தி பெற்ற லேன்ஸ்டவுன் கட்டடம் மற்றும் தேவராஜா மார்க்கெட் பாரம்பரிய முறையில் மேம்படுத்தப்படும்.