ADDED : ஆக 17, 2011 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'கடந்த, 1989ல் இருந்து, இதுவரை, 219 காஷ்மீர் பண்டிட்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், லோக்சபாவில் கூறியதாவது: காஷ்மீர் மாநில அரசிடம் இருந்து வந்துள்ள தகவலின்படி, 1989ல் இருந்து, இதுவரை, 219 காஷ்மீர் பண்டிட்டுகள், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
58 ஆயிரம் குடும்பத்தினர், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இது தொடர்பான அனைத்து சம்பவங்கள் குறித்தும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பண்டிட்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ஜிதேந்திரா சிங் கூறினார்.