தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அரசு வங்கியை ஏமாற்றிய வழக்கு:ரூ.235 கோடி சொத்துக்கள் மீட்பு

அரசு வங்கியை ஏமாற்றிய வழக்கு:ரூ.235 கோடி சொத்துக்கள் மீட்பு

அரசு வங்கியை ஏமாற்றிய வழக்கு:ரூ.235 கோடி சொத்துக்கள் மீட்பு


UPDATED : பிப் 19, 2025 09:50 PM

ADDED : பிப் 19, 2025 09:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2025 09:50 PM ADDED : பிப் 19, 2025 09:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பண மோசடி வழக்கில் தொடர்புடைய 235 கோடி ரூபாய் சொத்துக்களை, இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில், இந்தியன் வங்கி தி.நகர் கிளையில் கடன் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இதற்கென வங்கியை ஏமாற்றும் நோக்கத்துடன், தவறான புள்ளி விவரங்களுடன் கூடிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடன் வழங்கியபிறகே, நிறுவனத்தின் நிதி நிலை, வருவாய் ஆகியவை தொடர்பாக, அவர்கள் கொடுத்த ஆவணங்கள் பொய்யானவை என்று தெரியவந்தது.

இதையடுத்து வங்கி அளித்த புகாரில் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. பண மோசடி சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து நிறுவனத்துக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை, மோசடியால் பாதிக்கப்பட்ட இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us