ADDED : ஜன 20, 2025 07:05 AM

பெங்களூரு: ''பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் 25 பேர் காங்கிரசில் இணைவர்,'' என்று, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ரமேஷ் ஜார்கிஹோளி நினைத்தால் காங்கிரசில் இருந்து 60 எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வுக்கு அழைத்து வருவார் என்று, பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி உள்ளார். ஆறு எம்.எல்.ஏ.,க்களை கூட அழைத்து செல்ல முடியாது.
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நாற்காலி நாளுக்கு, நாள் ஆட்டம் காணுகிறது. அவர் காங்கிரசை பற்றி பேசுகிறார். பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் 25 பேர் காங்கிரசில் இணைவர். இதற்கு எந்த நிபந்தனையும் இல்லை.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இணைப்பு குறித்து, எங்கள் கட்சி தலைவர் சிவகுமார் உரிய நேரத்தில் தெரிவிப்பார். அடுத்த சட்டசபை தேர்தலிலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.
எங்கள் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. கர்நாடக அரசு தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுவது பொய்.
எனது துறை அதிகாரிகளுடன் டில்லி சென்று, குமாரசாமியை சந்தித்து பணிகள் குறித்து பேசினேன்.
மாநில நலன் கருதி அவருடன் இணைந்து செல்ல, நாங்கள் தயாராக உள்ளோம். முதல்வர் சித்தராமையாவும், குமாரசாமியும் சந்தித்து பேசினாலும் நல்லது. எங்களுக்கு எந்த கவுரவமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.