தெலுங்கானாவில் மர்ம நோய் தாக்குதல்! 3 நாளில் 2,500 கோழிகள் திடீர் பலி!
தெலுங்கானாவில் மர்ம நோய் தாக்குதல்! 3 நாளில் 2,500 கோழிகள் திடீர் பலி!
ADDED : பிப் 22, 2025 07:33 AM

வனபார்தி; தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 2500 கோழிகள் மர்ம நோயால் உயிரிழந்துள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வனபார்தி மாவட்டம், கொன்னூர் பகுதியில் தொடர்ந்து கோழிகள் உயிரிழந்து வருகின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் இதே பகுதியில் கிட்டத்தட்ட 2,500 கோழிகள் பலியாகி உள்ளன.
இதுகுறித்து மாவட்ட கால்நடை மருத்துவர் வெங்கடேஸ்வர் கூறி இருப்பதாவது;
வனபார்தி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் மர்ம நோய் பரவி உள்ளது. அதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்து இருக்கின்றன.
சம்பவ பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி இருக்கிறோம். பலியான கோழியின் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி உள்ளோம். அதன் முடிவுகள் வந்த பிறகே என்ன விதமான நோய் தாக்குதல் பரவி உள்ளது என்பதை அறிய முடியும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில், சிவகேஹலு என்பவரின் கோழிப் பண்ணையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் வளர்த்து வரும் 5,500 கோழிகளில் 2500 கோழிகள் உயிரிழந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.