sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மகரஜோதியன்று 2500 போலீஸ் பாதுகாப்பு; அலங்காரத்தில் பாரம்பரிய பூக்கள் பயன்பாடு

/

 மகரஜோதியன்று 2500 போலீஸ் பாதுகாப்பு; அலங்காரத்தில் பாரம்பரிய பூக்கள் பயன்பாடு

 மகரஜோதியன்று 2500 போலீஸ் பாதுகாப்பு; அலங்காரத்தில் பாரம்பரிய பூக்கள் பயன்பாடு

 மகரஜோதியன்று 2500 போலீஸ் பாதுகாப்பு; அலங்காரத்தில் பாரம்பரிய பூக்கள் பயன்பாடு


ADDED : ஜன 09, 2026 06:12 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இங்கு அலங்காரத்தில் பாரம்பரிய பூக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் மகரஜோதி விழா ஜன. 14 ல் நடக்கிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. அன்று சன்னிதானம் எஸ். பி. யாக சுஜித் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ. க்கள், கமாண்டோ படையினர், மத்திய அதிவிரைவு படையினர், மத்திய பேரழிவு நிவாரண படையினர் உட்பட 2500 பேர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடு படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகரஜோதிக்கு முந்தைய நாள் 13- ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும், 14 -ம் தேதி 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12 முதல் 14-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் கிடையாது. விருச்சுவல் கியூவில் முன்பதிவு செய்யாத எவரையும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

இனிவரும் நாட்களில் சன்னிதானம் வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்து உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரஜோதி தெரியும் இடங்களை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையில் மகரஜோதியன்று சன்னிதானத்தை சுற்றி பூ அலங்காரம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பெங்களூருவில் இருந்து மணம் இல்லாத வண்ண பூக்கள் வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும். அவ்வகை பூக்களை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கமான ரோஜா, மல்லிகை, துளசி உள்ளிட்ட பாரம்பரிய பூக்களும், குருத்தோலைகளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us