26 லட்சம் மைசூரு மை பாட்டில் லோக்சபா தேர்தலுக்காக ஆர்டர்
26 லட்சம் மைசூரு மை பாட்டில் லோக்சபா தேர்தலுக்காக ஆர்டர்
ADDED : பிப் 22, 2024 11:24 PM

மைசூரு: லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்த, மைசூரு பெயின்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட் தொழிற்சாலையில் இருந்து, 26 லட்சம் அழிக்க முடியாத மை பாட்டில் சப்ளை செய்யப்படுகின்றன.
இது குறித்து, தொழிற்சாலை இயக்குனர் முகமது இர்பான், நேற்று கூறியதாவது:
தேர்தலில் ஓட்டு பதிவு செய்த வாக்காளர்களின் கை விரல்களுக்கு, அழிக்க முடியாத அடையாள மை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும், கர்நாடக அரசு சார்ந்த மைசூரு பெயின்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட் தொழிற்சாலை, 1962ம் ஆண்டில் இருந்து அழிக்க முடியாத மை சப்ளை செய்கிறது.
இம்முறை லோக்சபா தேர்தலுக்கு, 26.5 லட்சம் மை பாட்டிலுக்கு ஆர்டர் வந்துள்ளது.
ஏற்கனவே 60 சதவீதம் மை பாட்டில்கள், பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. 24 மாநிலங்கள் தங்களுக்கு தேவையான மை பாட்டில்கள் பெற்றுள்ளன. மார்ச் 22க்குள், மற்ற மாநிலங்களுக்கும் மை பாட்டில்களை அனுப்பி, ஆர்டரை முடிப்போம்.
மை பாட்டில்களில் பத்து மில்லி இருக்கும். ஒரு பாட்டிலில் இருந்து, 700 விரல்களுக்கு மை பூசலாம். வாக்காளர்களின் இடது கை ஆள் காட்டி விரலில் மை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.