2023ல் நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக 28 ஆயிரம் புகார்கள்
2023ல் நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக 28 ஆயிரம் புகார்கள்
ADDED : ஜன 01, 2024 11:15 PM

புதுடில்லி: நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக, கடந்த 2023ம் ஆண்டு, 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதிவாகியுள்ளதாக தேசிய மகளிர் கமிஷன் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதிவான குற்றப்புகார் குறித்த தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுதும் பெண்களுக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு, பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, பாலியல் சீண்டல் ஆகிய குற்றங்கள் என 2023-ம் ஆண்டில் 28 ஆயிரத்து 811 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 109 வழக்குகளுடன் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. டில்லியில் 2 ஆயிரத்து 411 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், 1,343 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன . இதில் வரதட்சணை தொடர்பாக 4 ஆயிரத்து 797 வழக்குகள் பதிவாகியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.