ADDED : ஜூன் 21, 2025 02:53 AM

புதுடில்லி : இரண்டாம் கட்டமாக ஈரானில் இருந்து 290 இந்திய மாணவர்கள் நேற்றுஜூன் 05) டில்லி விமான நிலையம் வந்திறங்கினர்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இச்சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இதற்கான பணிகளை ஈரான், அர்மேனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்கள் மேற்கொண்டன. 1000 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்காக ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மஹான் ஏர்வேஸின் மூன்று விமானங்கள் வாயிலாக இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
முதற்கட்டமாக, ஈரானில் இருந்து, 110 இந்திய மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை டில்லி வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக நேற்று இரவு 290 இந்திய மாணவர்கள் ஈரானின் டெஹ்ரானில் இருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பலர் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. திட்டமிட்டபடி டில்லி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினார்.