ADDED : ஜன 20, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: கபிலா ஆற்றில் மூழ்கி, அய்யப்ப பக்தர்கள் மூவர் உயிரிழந்தனர்.
துமகூரு, கொரட்டகரேவை சேர்ந்த எட்டு பக்தர்கள், அய்யப்ப மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்றிருந்தனர். தரிசனம் முடிந்த பின், மாலையை கழற்றுவதற்காக மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடுக்கு வந்திருந்தனர். ஐந்து பக்தர்கள் புனித நீராட கபிலா ஆற்றில் இறங்கினர்.
ஆழமான பகுதிக்குச் சென்றதால், நீரில் மூழ்கத் துவங்கினர். இருவர் நீந்தி கரைக்கு வந்துவிட்டனர். கவிரங்கா, 20, ராகேஷ், 19, அப்பு, 16, ஆகிய மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து அங்கு வந்த, தீயணைப்பு படையினர், அப்புவின் உடலை மீட்டனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.