ADDED : ஜன 18, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, 'விவோ' ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் பணிபுரியும் சீன நாட்டைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்ட போலீசின் 'ஸ்வாட்' குழு மற்றும் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் ஆகியவை இணைந்து அதிரடி சோதனை நடத்தியது.
நொய்டா கெர்லி பாவ் பகுதியில் 'விவோ' நிறுவனத்தில் பணிபுரியும் யுசிங்போ, சான் சாவ் மற்றும் பெங்ஷாவோ ஆகீய மூவரும் விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மூவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

