ADDED : செப் 03, 2025 09:13 PM

புதுடில்லி: இந்திய வம்சாவளியை சேர்ந்த 261 பேர் பல்வேறு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக ராஜ்யசபா எம்பி சாந்தம் சிங் சாந்துவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலர், வெளிநாடுகளில் அரசியல் நிர்வாகம், சர்வதேச அமைப்புகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர். இந்திய நலனுக்கும், சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் நிலைக்கும் உகந்ததாக உள்ளது. அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவும், முதலீடும் அதிகரித்து வருகிறது.
உலகில் 204 நாடுகளில் 3.43 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பாகிஸ்தான், கியூபா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சான் மரினோவில் மட்டும் எந்த இந்தியர்களும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்
மொரிஷியஸ் -45
கயானா -33
பிரிட்டன் 31
பிரான்ஸ் -24
கனடா -22
சூரினாம் -21
டிரினிடாட் & டொபாகோ - 18
மலேஷியா, பிஜி -தலா 18
அமெரிக்கா - 6 இந்திய வம்சாவளியினர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகி உள்ளனர்.
இந்திய வம்சாவளியினர்
கடந்த ஜனவரி மாத கணக்குப்படி
வெளிநாடுகளில்
1,71,81,071 இந்திய வம்சாவளியினரும்
1,71,75,122 இந்தியர்களும் வசித்து வருகின்றனர்.
இதில்
அமெரிக்காவில் 56.93 லட்சம் பேரும்
ஐக்கிய அரபு எமீரேட்சில் 39.90 லட்சம் பேரும்
கனடாவில் 36.11 லட்சம் பேரும்
மலேஷியாவில் 29.35 லட்சம் பேரும்
சவுதி அரேபியாவில் 27.47 லட்சம் பேரும்
இலங்கையில் 16.07 லட்சம் பேரும்
தென் ஆப்ரிக்காவில் 13.92 லட்சம் பேரும்
பிரிட்டனில் 13.33 லட்சம் பேரும்
ஆஸ்திரேலியாவில் 9.76 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.