ADDED : அக் 29, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : மூன்று தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 24 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராம்நகரின் சென்னப்பட்டணா, ஹாவேரியின் ஷிகாவி, பல்லாரியின் சண்டூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல் கடந்த 18ம் தேதி துவங்கி 25ல் முடிந்தது. காங்., பா.ஜ., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 121 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை
நடந்தது.
சென்னப்பட்டணாவில் 38, சண்டூரில் 7, ஷிகாவியில் 19 என 64 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 24 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நாளை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். பின், எத்தனை வேட்பாளர்கள் உள்ளனர் என்பது தெரிய வரும்.

