ADDED : ஜன 18, 2024 02:09 AM
புதுடில்லி:டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் மூன்று நாட்கள் கோவா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார்.
இதுகுறித்து, அக்கட்சியின் கோவா மாநிலத் தலைவர் அமித் பலேகர் கூறியதாவது:
பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி.,க்கள் ராகவ் சத்தா, சந்தீப் பதக் ஆகியோருடன் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் 18 - 20 வரை கோவா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார்.
இந்தப் பயணத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவா சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு 18ம் தேதி ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.