ADDED : ஜன 21, 2024 11:56 AM

கவுஹாத்தி: அசாம் முதல்வர் பயப்படுகிறார் என காங்., எம்.பி ராகுல் நிருபர்கள் சந்திப்பில் கூறினார். இதற்கிடையே காந்தி குடும்பத்தை விட நாட்டில் ஊழல்வாதிகள் யாராவது இருக்க முடியுமா? என அசாம் முதல்வர் கடுமையாக சாடியிருந்தார்.
லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். யாத்திரை அசாமில் நுழைந்தது முதல் ராகுல் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை ஊழல்வாதி என குற்றம் சாட்டி வருகிறார்.
அசாம் முதல்வர்
இந்நிலையில், அசாம் முதல்வர் நிருபர்கள் சந்திப்பில்,'' நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். காந்தி குடும்பத்தை விட ஊழல்வாதிகள் யாராவது இருக்க முடியுமா?. ராகுல் முன்பு என்னை திட்டினார். இப்போது என் குழந்தையையும் திட்ட ஆரம்பித்துவிட்டார். '' என பதிலடி கொடுத்தார்.
ராகுல்
இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, '' அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பயப்படுகிறார். அவர் ஒரு ஊழல் வாதி'' என காங்.,எம்.பி ராகுல் பதில் அளித்தார்.

