sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: வங்கதேசத்திற்கு இந்தியா அறிவுரை

/

ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: வங்கதேசத்திற்கு இந்தியா அறிவுரை

ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: வங்கதேசத்திற்கு இந்தியா அறிவுரை

ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: வங்கதேசத்திற்கு இந்தியா அறிவுரை

24


UPDATED : நவ 29, 2024 06:51 PM

ADDED : நவ 29, 2024 04:32 PM

Google News

UPDATED : நவ 29, 2024 06:51 PM ADDED : நவ 29, 2024 04:32 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமையை அந்நாட்டின் இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் '' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இது தடுக்கப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசு கூறினாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மேலும், ' இஸ்கான் ' அமைப்பை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது



ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் பிரச்னையை வங்கதேச அரசிடம் தொடர்ச்சியாகவும், வலிமையாகவும் எடுத்துக்கூறி வருகிறோம். அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டிய கடமையை இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. பயங்கரவாதத்திற்கு ஆதரவான பேச்சுக்கள், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவை பார்த்து கவலைப்படுகிறோம். இந்நிகழ்வுகள் அனைத்தையும் மீடியாக்களில் வருபவை என ஒதுக்கிவிட முடியாது.

இஸ்கான் அமைப்பானது, உலகளவில் சமூக சேவையில் நன்கு அறியப்பட்ட அமைப்பாகும். சிறுபான்மையினரை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் கருத்து துரதிர்ஷ்டம்

மஹா., தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போல், பிரதமர் மோடியும் மறதியால் அவதிப்படுவதாக கூறியிருந்தார்.

இது குறித்து ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு வகைகளில் உறவை பகிர்ந்து வருகின்றன. இது பல ஆண்டுகளாக பரஸ்பர மரியாதை மற்றும் உறுதித்தன்மை உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டது. ராகுலின் இதுபோன்ற கருத்து துரதிர்ஷ்டவசமானது. அவரின் கருத்து இந்திய அரசின் நிலைப்பாட்டை எதிரொலிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதானி விவகாரம்

அதானி விவகாரம் குறித்து ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: அமெரிக்க நீதித்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இடையிான சட்ட விவகாரமாக நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை. அமெரிக்க அரசு எந்த தகவலையும் பகிரவில்லை. கோரிக்கையையும் அமெரிக்க அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us