sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆஸி.,யைத் தொடர்ந்து மலேசியாவிலும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

/

ஆஸி.,யைத் தொடர்ந்து மலேசியாவிலும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

ஆஸி.,யைத் தொடர்ந்து மலேசியாவிலும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

ஆஸி.,யைத் தொடர்ந்து மலேசியாவிலும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

1


ADDED : நவ 24, 2025 07:44 PM

Google News

1

ADDED : நவ 24, 2025 07:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மலேசியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்து முதல் நாடாக ஆஸ்திரேலியா சட்டம் இயற்றியது. வரும் டிச.,10ம் தேதி அமலாகும் இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், திரெட்ஸ், டிக்டாக், எக்ஸ், யூடியூப், ரெடிட் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையை உலகின் பல நாடுகள் கவனித்து வருகின்றன. டென்மார்க் நாடும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்போவதாக கூறியுள்ளது.

இந்நிலையில், மலேசியாவும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மலேசியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பாத்மி பட்ஜில் கூறியதாவது: இளம் வயதினரை சைபர் மோசடிகள், முறைகேடுகள் மற்றும் பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தோடு, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பயனர்களின் வயதை உறுதி செய்ய அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் உள்ள ஆவணங்களை மின்னணு முறையில் பயன்படுத்துவது குறித்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றும் முறையை கடைபிடிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அரசு, அமைப்புகள் மற்றும் பெற்றோர் தங்கள் பணியை முறையாக செய்தால், மலேசியாவில் இணையதள சேவை என்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில் எப்போது அமலுக்கு வரும் என அவர் கூறவில்லை. 2026 ம் ஆண்டு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் டிஜிட்டல் தளங்களுக்கான கொள்கையின்படி 80 லட்சம் பயனர்களை கொண்ட சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற செயலிகள் லைசென்ஸ் பெறுவது ஜனவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி லைசென்ஸ் பெறுபவர்கள், வயது உறுதிச்சான்று, உள்ளடக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us