"உ.பி., உடன் இனி சோனியா குடும்பத்திற்கு எந்த தொடர்பும் இருக்காது": பா.ஜ.,
"உ.பி., உடன் இனி சோனியா குடும்பத்திற்கு எந்த தொடர்பும் இருக்காது": பா.ஜ.,
ADDED : பிப் 15, 2024 11:48 AM

புதுடில்லி: 'உத்தரபிரதேச மாநிலத்துடன் இனி முறைப்படி சோனியா குடும்பத்திற்கு எந்த தொடர்பும் இருக்காது' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறினார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் (2024) லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் இருந்து காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு காங்., மூத்த தலைவர் சோனியா போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தனது ரேபரேலி லோக்சபா தொகுதியை மகள் பிரியாங்காவிற்கு விட்டு கொடுக்கிறார் எனக் கூறப்படுகிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தனது அமேதி தொகுதியை விட்டு வெளியேறிய ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
ரேபரேலி தொகுதி
இது குறித்து ஷேசாத் பூனவாலா கூறியிருப்பதாவது: உத்தரபிரதேச மாநிலத்துடன் இனி முறைப்படி சோனியா குடும்பத்திற்கு எந்த தொடர்பும் இருக்காது. இந்த வேட்பு மனுவின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. உ.பி உடனான உறவை சோனியா காப்பாற்றவில்லை.
உத்தரபிரதேசம் தனது குடும்பத்தை அரசியல் ரீதியாக வளர்த்தது. முதலில் அமேதியை இழந்த காங்கிரஸ் இப்போது ரேபரேலி தொகுதியையும் இழக்கப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

