நீங்கள் எனக்கு ஓட்டு போட்டீங்க; ஆனால் முதலாளி கிடையாது: தொண்டரை கோபத்தில் வெளுத்த அஜித்பவார்
நீங்கள் எனக்கு ஓட்டு போட்டீங்க; ஆனால் முதலாளி கிடையாது: தொண்டரை கோபத்தில் வெளுத்த அஜித்பவார்
ADDED : ஜன 07, 2025 07:18 AM

மும்பை: நீங்கள் எனக்கு ஓட்டு அளித்தீர்கள். ஆனால் எனக்கு நீங்கள் முதலாளி அல்ல என தொண்டர்களை கோபத்தில் மஹா., துணை முதல்வர் அஜித் பவார் திட்டினார்.
மஹா., மாநிலம், பாராமதிக்கு வருகை தந்த துணை முதல்வர் அஜித் பவார் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். மெடாட் கிராமத்தில் பெட்ரோல் பம்ப் திறப்பு விழாவில் அஜித் பவார் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த போது, மஹா., துணை முதல்வர் அஜித் பவாருக்கு கட்சி தொண்டர்கள் நினைவுப்பரிசுகை வழங்க முயற்சி செய்தனர். இதனால் அஜித்பவார் டென்ஷன் அடைந்தார்.
பின்னர் அவர், ' நீங்கள் எனக்கு ஓட்டளித்தீர்கள். ஆனால் நீங்கள் என் முதலாளி அல்ல' என கோபத்துடன் தெரிவித்தார். நான் உங்களின் வேலைக்காரனாக மாற்றப்பட்டேன் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவெளியில் கட்சியினரை அஜித் பவார் திட்டியதால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் நடந்த, சட்டசபை தேர்தலில், அஜித் பவார் தனது சகோதரர் மகன் யுகேந்திர பவாரை 1 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.