"வேலை தேடுவதை விட வேலை கொடுக்கும் நபராக முன்னேறிய இளைஞர்கள்": பிரதமர் மோடி
"வேலை தேடுவதை விட வேலை கொடுக்கும் நபராக முன்னேறிய இளைஞர்கள்": பிரதமர் மோடி
ADDED : மார் 20, 2024 12:48 PM

புதுடில்லி: 'வேலை தேடுவதை விட, வேலை வழங்குபவராக இந்தியாவின் இளைஞர்கள் மாறி வருகிறார்கள்' என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டில்லி பாரத் மண்டபத்தில் நடந்த ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 2047ம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில், ஐ.டி., துறையில் இந்தியா பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது. இந்தியாவில் ஸ்டார்ட்அப் துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய இளைஞர்களின் திறனை உலகம் பார்ந்து வியந்து வருகிறது. மக்களின் சிந்தனையை மாற்றியுள்ளோம். வேலை தேடுவதை விட, வேலை வழங்குபவராக இந்தியாவின் இளைஞர்கள் மாறி வருகிறார்கள். 1.25 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

