நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!
நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!
ADDED : ஜூலை 17, 2025 09:48 AM

புதுடில்லி: கடந்த ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் கொல்லப்பட்டதாக பஸ்தார் ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார். மாவோயிஸ்டுகள் 357 பேர் கொல்லப்பட்டதை, நக்சல் அமைப்புகள் ஒப்புக் கொண்டு உள்ளது.
தண்டகாரண்யா பகுதியில் கடந்த ஓராண்டில் அதிகபட்ச இழப்புகளைச் சந்தித்ததாக மாவோயிஸ்ட் மத்திய குழு ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என
பஸ்தார் ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் பசவ ராஜு உட்பட பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் பல்வேறு என்கவுண்டர்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன.இது குறித்து, பஸ்தார் ஐ.ஜி., சுந்தர்ராஜ் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, பஸ்தரில் இருந்து நக்சலிசம் விரைவில் ஒழிக்கப்படும்.
பஸ்தாரில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கும் ஏற்ப நாங்கள் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.