சர்ஜாபூர்- - ஹெப்பால் இடையே 37 கி.மீ.,க்கு புதிய மெட்ரோ பாதை
சர்ஜாபூர்- - ஹெப்பால் இடையே 37 கி.மீ.,க்கு புதிய மெட்ரோ பாதை
ADDED : பிப் 22, 2024 11:22 PM
பெங்களூரு: பெங்களூரு சர்ஜாபூர்- - ஹெப்பால் இடையில் 37 கிலோ மீட்டர் துாரத்திற்கு 16,543 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது.
பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் மெட்ரோ ரயிலில் ஆறு லட்சம் பயணியர் பயணம் செய்கின்றனர். தற்போது செல்லகட்டா -- ஒயிட் பீல்டு, மாதவரா- - சில்க் இன்ஸ்டிடியூட் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆர்.வி., ரோடு முதல் பொம்மச்சந்திரா வரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில் சர்ஜாபூர்- - ஹெப்பால் இடையில் 37 கிலோ மீட்டர் துாரத்திற்கு 16,543 கோடி ரூபாய் செலவில், புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
இந்த வழித்தடத்தில் கங்கா நகர், வெட்னரி கல்லூரி, கங்கேன ஹள்ளி, மேக்ரி சதுக்கம், பேலஸ் குட்டஹள்ளி, பெங்களூரு கோல்ப் கோர்ஸ், பசவேஸ்வரா சதுக்கம், கே.ஆர்.சதுக்கம், டவுன்ஹால், சாந்தி நகர், நிமான்ஸ், டெய்ரி சதுக்கம், கோரமங்களா இரண்டாவது பிளாக், கோரமங்களா மூன்றாவது பிளாக், சிக்க சந்திரா, அகரா, இப்பலுார்.
பெல்லந்தூர் கேட், கை கொண்டரஹல்லி, கார்மேலரம், அம்பேத்கர் நகர், கோடதி கேட், முத்தநல்லூர் கிராஸ், தோம் சந்திரா, சோம்புரா, காலேன அக்ரஹாரா ரோடு ஆகிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.