3வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 271 ரன்கள் இலக்கு
3வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 271 ரன்கள் இலக்கு
ADDED : டிச 06, 2025 05:32 PM

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி, 270 ரன் எடுத்து, இந்திய அணிக்கு 271 ரன் இலக்கு நிர்ணயித்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெல்ல, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) நடக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணியின் துவக்க வீரர்களாக, குயிண்டன் டிகாக், ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர். ரியான் ரிக்கெல்டன் பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் பவுமா, குயிண்டன் டிகாக் உடன் இணைந்து நிலைத்து நின்று ஆடினர்.
குயிண்டன்டிகாக் சதம் விளாசல்:
நிலைத்து விளையாடிய, குயிண்டன் டிகாக், 89 பந்துகளை சந்தித்து 6 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடித்து சதம் (106 ரன்கள்)அடித்தார்.
அதனை தொடர்ந்து கேப்டன் பவுமா , 5 பவுண்டர்கள் அடித்து 48 ரன்களுக்கு ரவிந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மேத்தீவ் ப்ரீட்ஸ்க் 24 ரன்களும் பிரேவிஸ் 29 ரன்களும் சேர்த்து அவுட் ஆனார்கள்.
குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சு:
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தென் ஆப்ரிக்கா வீரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்தினார். குல்தீப் பிரேவிஸ், ஜேன்சன், போஸ்க், லுங்கி நிகிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுககளை வீழ்த்தினர்.
இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு, 271 ரன்கள் வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா நிர்ணயித்துள்ளது.

