UPDATED : செப் 20, 2024 05:39 PM
ADDED : செப் 20, 2024 04:51 PM

புதுடில்லி; 18 நாட்களில் 4 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து பா.ஜ., வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியில் சேருமாறு மக்களை வலியுறுத்தும். கட்சியின் மீது ஈடுபாடு, அபிமானம் கொண்டவர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு அதற்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்வர். இது அனைத்து அரசியல் கட்சிகளிலும் நடக்கும் நிகழ்வு.
இந்நிலையில் எந்த கட்சியும் செய்யாத சாதனையாக, 18 நாட்களில் 4 கோடி புதிய உறுப்பினர்களை பா.ஜ., சேர்த்து மற்ற கட்சிகளை மிரள வைத்துள்ளது. இந்த தகவலை பா.ஜ., தேசிய தலைமை தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; 18 நாட்களில் 4 கோடி உறுப்பினர்களை கடந்துவிட்டோம். இன்னமும் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு வருகின்றனர். மற்றுமொரு சாதனையை பா.ஜ., படைத்துள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே கூறி உள்ளதாவது; உறுப்பினர் சேர்க்கையில் புதுவேகம் உள்ளதுபோல், புதிய அடையாளங்களை உருவாக்குவது என்பதை பற்றி மக்கள் சிந்தித்து வருகின்றனர் என்று கூறி உள்ளார்.