வானில் ஒரு அதிசய நிகழ்வு: இன்று பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
வானில் ஒரு அதிசய நிகழ்வு: இன்று பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
ADDED : டிச 04, 2025 01:31 PM

புதுடில்லி: வானில் இன்று (டிச.,04) மாலை 6.14 மணிக்கு அதிசயம் நிகழவுள்ளது. குளிர் முழு நிலவாக காட்சியளிக்கும் நிலா, வழக்கத்தை காட்டிலும், கூடுதல் பிரகாசமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வானில் நிலவின் பிரகாசம் மற்றும் வடிவம் மாறி தோன்றும் நிகழ்வு அதிசயமாக கருதப்படுகிறது. அந்தவகையில், வானில் இன்று (டிச.,04) மாலை 6.14 மணிக்கு அதிசயம் நிகழவுள்ளது. நிலவு, குளிர் முழு நிலவு (புல் கோல்ட் மூன்) என்ற நிலையை அடைய உள்ளது. அதாவது வழக்கத்தை காட்டிலும் 14 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் ஒளிர உள்ளது. இந்த பவுர்ணமி தினத்தில், நிலவானது பூமியில் இருந்து 3.57 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் வர உள்ளது.
பூமிக்கும், நிலவுக்கும் இடை யிலான தொலைவு, இந்த நாளில் 10 முதல் 14 சதவீதம் குறைவாக இருக்கும். இவ்வாறு தொலைவு குறைவதே, நிலவு கூடுதல் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம். இந்த பிரகாசம், நாளை அதிகாலை 4.44 மணிக்கு உச்ச நிலையை அடையும்.
கடந்த 2023ல் இந்த குளிர் முழு நிலவு தோன்றிய நிலையில், அடுத்து 2028ம் ஆண்டு தான் இந்த நிகழ்வு நிகழும். இதனால் இன்று பார்ப்பதற்கு மிஸ் பண்ணிடாதீங்க.
ஒவ்வொரு முழு நிலவுக்கும் ஒரு பெயர் உண்டு. டிசம்பர் மாத முழு நிலவு, குளிர் முழு நிலவு என்று அழைக்கப்படுகிறது. 2026ம் ஆண்டு முழு நிலவு தெரியும் தேதிகள்:
ஜனவரி 3, 2026
பிப்ரவரி 1, 2026
மார்ச் 3, 2026
ஏப்ரல் 1, 2026
மே 1, 2026
மே 31, 2026
ஜூன் 29, 2026
ஜூலை 29, 2026
ஆகஸ்ட் 27, 2026
செப்டம்பர் 26, 2026
அக்டோபர் 26, 2026
நவம்பர் 24, 2026
டிசம்பர் 23, 2026

