ADDED : அக் 20, 2026 06:40 PM
புதுடில்லி: டெல்லியின் புறநகர் பகுதியான பீராகர்ஹி சவுக் அருகே, ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்த பல தொழிற்சாலைகளில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
பீராகர்ஹி சவுக் அருகே ஜ்வலாபுரியில் ஒரு கட்டடத்தில் உள்ள சிறு தொழிற்சாலைகளில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.
கட்டடத்தின் அடித்தளம், தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களில் பல்வேறு சிறு தொழிற்சாலைகளில் எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி காலை, 10:30 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அடித்தளத்தில் ரப்பர் மேட், தரைத்தளத்தில் ஹெல்மெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் செருப்பு மற்றும் சால்வை தயாரிக்கும் ஆலைகள் இருக்கின்றன. விசாரணை நடக்கிறது.
