sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ம.பி.யில் கார்-லாரி மோதல்; 4 பேர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி பலியான சோகம்

/

ம.பி.யில் கார்-லாரி மோதல்; 4 பேர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி பலியான சோகம்

ம.பி.யில் கார்-லாரி மோதல்; 4 பேர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி பலியான சோகம்

ம.பி.யில் கார்-லாரி மோதல்; 4 பேர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி பலியான சோகம்

1


ADDED : ஜன 30, 2026 05:44 PM

Google News

ADDED : ஜன 30, 2026 05:44 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவாலியர்; மத்திய பிரதேசத்தில் கார் ஒன்றும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

குவாலியர் பரேதா சுங்கச்சாவடி அருகே மகாராஜ்புரா என்ற பகுதியில் காலை 8 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. பிந்திலிருந்து குவாலியருக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் குவாலியரில் இருந்து பிந்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

சாலையோர உணவகம் அருகே இவ்விரு வாகனங்களும் வந்த போது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விபத்தில் காரில் இருந்த 4 பேரும் உடல்நசுங்கி பலியாகினர். இவர்கள் அனைவரும் பிந்த் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து நிகழ்ந்த அடுத்த கணமே லாரி டிரைவர் சம்பவ பகுதியில் இருந்து தப்பியோடிவிட்டார்.

தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வரும் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அடர்மூடு பனியே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us