sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

4 கூலி தொழிலாளிகள் சாலை விபத்தில் பலி

/

4 கூலி தொழிலாளிகள் சாலை விபத்தில் பலி

4 கூலி தொழிலாளிகள் சாலை விபத்தில் பலி

4 கூலி தொழிலாளிகள் சாலை விபத்தில் பலி


ADDED : பிப் 29, 2024 05:39 AM

Google News

ADDED : பிப் 29, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீதர், : பீதர் அருகே இரண்டு வாகனங்கள், நேருக்கு நேர் மோதிய விபத்தில் நால்வர் பலியாகினர்.

பீதர், பால்கியின் சேவாநகர தான்டா அருகில் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், டாடா ஏஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, வாகனம் மீது மோதியது.

இதில், டாடா ஏஸ் வாகனத்தில் இருந்த ஓட்டுனர் வலி, 31, தஸ்தகிரி தாவலசாப், 36, ரஷீத் ஷேக், 41, அமாம் ஷேக், 51, ஆகியோர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தன்னுாரா போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பீதர் எஸ்.பி., சென்ன பசவண்ணா கூறுகையில், ''விபத்தில் இறந்தவர்கள் அனைவரும், மஹாராஷ்டிராவின் உத்கீரை சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தில் கூலி வேலை செய்கின்றனர்.

உத்கீரில் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்ற பின், ஹைதராபாதுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, விபத்து நேர்ந்துள்ளது. லாரி ஓட்டுனர் அதிவேகமாக, அலட்சியமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us