ADDED : ஆக 01, 2025 10:54 PM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, போதை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அப்துல்முனீர் மற்றும் சொரனூர் டி.எஸ்.பி., மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில், கொப்பம் எஸ்.ஐ., சிவசங்கரன் குழுவினர், கொப்பம் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 'கேஎல் 52 ஆர் 3818' என்ற எண்ணுள்ள காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 29.83 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர்கள் கொப்பம் பகுதியைச் சேர்ந்த நபீல், 24, மலப்புரம் மாவட்டம் வண்டூரை சேர்ந்த நப்ஹான், 31, மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நிகில், 40, திருவேகப்புறை பகுதியை சேர்ந்த ஹைதர் அலி, 32, ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.