ADDED : ஆக 01, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளராக (டி.ஆர்.எம்.,) மதுக்கர் ரவுத்து பொறுப்பேற்றார்.
ஜெய்ப்பூரை சேர்ந்த மதுக்கர் ரவுத்து, 1997ல் ஐ.ஆர்.டி.எஸ்., பிரிவை சேர்ந்தவர். வடமேற்கு ரயில்வேயில் தலைமை சரக்கு அதிகாரியாகப் பணியாற்றிய இவரை, பாலக்காடு கோட்ட மேலாளராக ரயில்வே நிர்வாகம் நியமனம் செய்துள்ளது. அகமதாபாத் பிரிவில் பணிபுரிந்தபோது, தனியார் சரக்கு முனையத்தைத் துவங்க முயற்சி எடுத்துள்ளார்.
இது, வருவாய் மற்றும் சரக்கு கையாளும் திறனை கணிசமாக அதிகரிக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.