ADDED : மார் 18, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்ச்சூர்: கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட ஆயுதப்படை ஏட்டு உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ராய்ச்சூர் நகரம், சாந்தி காலனியில், கள்ள நோட்டு அச்சிடப்படுவதாக, ராய்ச்சூர் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்து. நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு கள்ள நோட்டுகள் தயாரிப்பதற்கான பொருட்கள், கள்ள நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த முகமது யாசின், ரமேஷ் ஆதி, சிவலிங்கா, ஆயுதப்படை ஏட்டு மரிலிங்கா ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹைதராபாத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி உத்தரவின்படி, கள்ள நோட்டு தயாரித்து, ராய்ச்சூரில் விநியோகிப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.