தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம் 5 பேர் மீட்பு: 3 பேர் மாயம்?

இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம் 5 பேர் மீட்பு: 3 பேர் மாயம்?

இடிந்து விழுந்த 4 மாடி கட்டடம் 5 பேர் மீட்பு: 3 பேர் மாயம்?


UPDATED : அக் 07, 2026 07:38 PM

ADDED : அக் 07, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:38 PM ADDED : அக் 07, 2026 07:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: வடகிழக்கு டில்லி, சீமாபுரி பகுதியில், நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வடகிழக்கு டில்லியில் உள்ள சீமாபுரி பகுதியில், நேற்று மதியம் 3:30 மணியளவில், 225 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்ட நான்கு மாடி நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தின் இடிபாடுகள் அருகில் உள்ள மூன்று வீடுகளின் சில பகுதிகளை மூடியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தை அடுத்து, தீயணைப்பு படையினர், டில்லி போலீசார், உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்புபடையினர் சம்பவ இடுத்திற்கு விரைந்தனர். உடனடியாக மீட்புப்பணி துவங்கியது.

இடிபாடுகளில் காயமடைந்த நிலையில் ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இடிந்த கட்டடத்திற்கு உள்ளே இரண்டு அல்லது மூன்று பேர் சிக்கியிருக்கிலாம் என்று கருதப்படுகிறது.

நேற்று முன்தினம் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், டில்லி தேசிய தலைநகர் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்த கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று, அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us