தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சமூக பணியாற்ற வாருங்கள்; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அழைப்பு

சமூக பணியாற்ற வாருங்கள்; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அழைப்பு

சமூக பணியாற்ற வாருங்கள்; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அழைப்பு


UPDATED : அக் 08, 2026 06:06 AM

ADDED : அக் 07, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:06 AM ADDED : அக் 07, 2026 07:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: ''உலக மக்கள் அனைவரும் நிறைவாக வாழ வேண்டும். இதற்காக நம் தேச மக்கள் சமூக பணியாற்ற அதிகளவில் முன்வர வேண்டும்,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தியோலாபூரில், மறைந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

உலக நன்மை, சமூக நலன் மற்றும் நம் பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி. இந்த வழியை யாராலும் தவிர்க்க முடியாது. ஒவ்வொருவரும் வாழ்க்கையை நிறைவாக வாழ வேண்டும்.

அதற்காக நாமும் பங்களிக்க வேண்டும். தேசத்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், சமூக சேவைக்கு வருவோரின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. சமூகத்திற்காக பணியாற்ற, நிறைய பேர் முன்வர வேண்டும்.

நமக்கு குடும்பம், வேலை இருக்கிறது; அதனால், சமூக பணியை வேறு யாராவது செய்வர் என்ற மனநிலையை மக்கள் மாற்ற வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் தியாகம், சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தி வாழ்பவர்களே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ முடியும்.

சமூக நலனுக்காக நற்காரியங்களை செய்யும்போது, அதே அளவுக்கான நன்மை நமக்கு நிச்சயம் திரும்ப கிடைக்கும். விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த மறைந்த தலைவர்கள் அசோக் சிங்கால், மோரோபந்த் பிங்கலே போன்றவர்கள், சமூக நலனுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.

நிகழ்காலத்தில் எப்போது எல்லாம் நன்மை நடக்கிறதோ, அப்போதெல்லாம் கடந்த காலத்தில் இதற்காக பாடுபட்டவர்களை இந்த உலகம் நினைவில் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us